பாகிஸ்தான் அதிபருடன் சிரித்தபடி கை குலுக்கிய பிரதமர் மோடி..!
பீஜிங்:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் நேற்று தொடங்கியது. இதற்காக நேற்று அங்கு சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் ஆகியோரை சந்தித்து இந்தியாவுடனான இந்நாடுகளின் நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், இன்று மாநாட்டின் அமர்வு தொடங்கியது. இதில், உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பாகிஸ்தானில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இடைக்கால அரசு உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு அதிபர் மம்னூன் உசைன் மாநாட்டில் கலந்து கொண்டார்.
மாநாடு முடிந்த பின்னர் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த சமையத்தில் மம்னூன் உசைன் – மோடி இருவரும் சிரித்தபடி கையை குலுக்கினர். பின்னர், இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றனர். இதனை, சீன அதிபர் ஜி ஜின்பிங் அருகில் நின்று சிரித்துக்கொண்டு பார்த்தார்.
பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை நிலவி வரும் சூழலில், இரு தரப்பில் இருந்தும் எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.