பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு உதவிகள் தற்காலிகமாக நிறுத்தம்;அமெரிக்கா அறிவிப்பு…!!
பாகிஸ்தானுக்கு நிதி உதவியை தொடர்ந்து பாதுகாப்பு உதவிகளையும் நிறுத்தம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரசு, அமெரிக்க அதிகாரிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தும் ஆப்கானிய தலிபான் மற்றும் ஹக்கானி உள்ளிட்ட தீவிரவாத குழுக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து வகையான உதவிகளையும் அமெரிக்க அரசு நிறுத்திவைக்கும் என்கிறார் அமெரிக்க அரசின் செய்திதொடர்பாளர் ஹெதர் நுர்ட்.