பாகிஸ்தானுக்கான தூதரைத் திரும்பப் பெற்றது பாலஸ்தீனம்!இந்தியாவின் கட்டளையை தொடர்ந்து ..
பாகிஸ்தானில் ஹபீஸ் சயீதின் கூட்டத்தில் கலந்துகொண்ட தூதரைப் பாலஸ்தீன அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது.
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அங்கீகரித்த அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானின் ராவல்பிண்டி லியாகத் பாக்கில் கூட்டம் நடைபெற்றது. 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹபீஸ் சயீது பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கான பாலஸ்தீனத் தூதர் வாலித் அபு அலியும் கலந்துகொண்டார். இது குறித்து டெல்லியில் உள்ள பாலஸ்தீனத் தூதர் அட்னான் அபு அல் ஹைஜாவிடம் இந்தியா கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கான தூதர் வாலித் அபு அலியை பாலஸ்தீன் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. இந்தத் தகவலைத் தெரிவித்துள்ள இந்தியாவுக்கான பாலஸ்தீனத் தூதர் அட்னான் அபு அல் ஹைஜா, இந்தியாவுடன் மிக நெருங்கிய நட்புக் கொண்டுள்ள பாலஸ்தீனம் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்குத் துணை நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
source: dinasuvadu.com