பாகிஸ்தானில் மலாலாவை சுட்ட தாலிபன் தீவிரவாதி கொலை?
அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் பாகிஸ்தானில் மலாலாவை சுட்ட தாலிபன் தீவிரவாதி ஃபாசுல்லா கொல்லப்பட்டான். ஆனால், அவன் கொல்லப்பட்டதாக ஏற்கனவே பலமுறை செய்திகள் வெளியாகி உள்ளதால், அவனது மரணத்தில் குழப்பம் நீடிக்கிறது.
பாகிஸ்தான் தனியார் வானொலியில் நீண்ட உரைகள் நிகழ்த்தி, முல்லா ரேடியோ என்று புகழ் பெற்றவன் ஃபாசுல்லா. ஜூன் 13ம் தேதி ஆப்கான் எல்லையை ஒட்டிய குனார் மாகாணத்தில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் ஃபாசுல்லாவை குறிவைத்து நடத்திய வான்தாக்குதலில் அவன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.