கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், தனியார் பள்ளி பெண் முதல்வர், தேநீர் விற்பனை செய்து வருகிறார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, சோமம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா, 35; இவரது மனைவி செல்வி, 32. இவர், முதுநிலை இயற்பியல் மற்றும் பி.எட்., ஆசிரியர் பட்டம் பெற்றுள்ளார். இவரது கணவர் சிவா நடத்தி வரும் மழலையர் பள்ளியில், முதல்வராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மார்ச், 24 முதல், ஊரடங்கு அமலில் உள்ளதால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.இதனால், வேலை இழந்த இவர், பள்ளிக்கு எதிரே வண்ணாத்திகுட்டை பஸ் ஸ்டாப் அருகில், ஆவின் பாலகம் பெட்டிக் கடையில், டீ விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்து செல்வி கூறியதாவது, என் கணவர் நடத்தி வரும், அக் ஷய வித்யாலயா மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில், முதல்வராக பணியாற்றி வருகிறேன். ஊரடங்கால் பள்ளி மூடி இருப்பதால், போதிய வருவாய் இல்லை.கிராமப்புற மாணவ – மாணவியரின் பெற்றோரால், பள்ளி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அவர்களை தொந்தரவு செய்யவும் விரும்பவில்லை.குடும்ப வருவாய்க்காக, என் மாமனார் நடத்தி வரும் பெட்டிக் கடையில் தினமும், டீ விற்பனை செய்து வருகிறேன். ஏராளமான தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் வருவாய் இன்றி, வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால், அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2-வது பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று மாலை 4 மணியளவில் ஃபெங்கால்…
பாட்னா : கடந்த 2 நாட்களாக ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற்று வந்தது. 477 வீரர்களை உள்ளடக்கிய…
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 6 மணி நேரத்தில் (இரவு 7.30 மணிக்குள்) புயலாக…
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கதை சினித்துறையில் பல வதந்திகள் உண்டு. ஆனால், கீர்த்தி அதையெல்லாம்பெரியதாக எடுத்துக்…