பல் கூச்சத்க்கு நிவாரணம் தரும் புதினா..,
பல்வேறு நபர்கள் பல்-லில்ஏற்படும் பிரச்சனை அதிகமாக உள்ளது.அதனை சரியான முறையில் சரி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் தேவையில்லாத செயல்களை செய்வதினால் பல் வலி தான் அதிகமாகும்.
பற்சிதைவு, பல் உடைதல், எனாமல் தேய்தல், முறையற்ற வகையில் கடுமயாகப் பற்களைத் தேய்ப்பதால் பல் வேர்கள் வெளியே தெரிவது, பற்களை விட்டு ஈறு விலகுதல் மற்றும் ஈறுகளில் தொற்று ஆகியவற்றால் பற்கூச்சம் ஏற்படுகிறது.
உப்பு நீரில் கொப்பளிப்பது மிக மிக நல்லதாகும். அவை பற்களில் அமில-காரத்தன்மையை சமன் படுத்தும். பேக்டீரியாக்களை உப்பு அழிக்கும். ஈறுகளை பலப்படுத்தும்.ரத்தக் கசிவிற்கு உப்பு நீரில் கொப்பளித்தால் நல்ல பலங்களைத் தரும்.
கிராம்பு சிறந்த வலி நிவாரணி. வலியை மரத்துப் போகச் செய்யும். பேக்டீரியாக்களை அழிக்கிறது. அதன் காரத்தன்மைக்கு பேக்டீரியாக்கள் பற்களை நெருங்காது.
புதினா இலையை எடுத்து அதை நிழலில் நன்றாக காய வைத்து, தூள் உப்புடன் சேர்த்து காலை, மாலை பல் துலக்கினால் இரண்டே நாட்களில் பல் கூச்சம் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.மேலும் புதினாவில் உள்ள நறுமணம் வாயில் ஏற்படும். அது ஒரு புத்துணர்வை தரும்.