பல்கேரியா – ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி 2 பைலட்கள் பலி
பல்கேரியா நாட்டின் குருமோவோ விமானப் படைத்தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வழக்கமான பயிற்சியில் நேற்று ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
தென் பகுதியில் அமைந்துள்ள ப்ளோவ்டிவ் நகரின் மேலே பறந்தபோது ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து அது கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 2 பைலட்களும் பரிதாபமாக பலியாகினர். மேலும், விமான நிறுவன ஊழியர் ஒருவரும் படுகாயம் அடைந்தார். விமான விபத்து ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.