பரபரப்பாகும் தமிழக அரசியல்….முக.ஸ்டாலின் , திருமாவளவன் தீடிர் சந்திப்பு…!!
திமுக தலைவர் முக.ஸ்டாலினை விடுதலைசிறுத்தைகட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வருகையையொட்டி அரசியல் கூட்டணி குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் விவாதித்து வருகின்றனர்.இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு திமுகவின் பொருளாளர் துரைமுருகன் திமுக கூட்டணியில் மதிமுக_வும் , விடுதலைசிறுத்தை கட்சியும் திமுகவுடன் கூட்டணியில் இல்லை என்று கூறினார்.திமுக_வுடன் காங்கிரஸ் கட்சியும் , முஸ்லீம் லீக்_கும் தான் கூட்டணி மற்ற கட்சிகள் எங்களின் நண்பர்கள் என்று கூறினார்.இது தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது.இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மதிமுக தலைவர் வைகோ துரைமுருகன் பேசியதில் தமிழகம் முழுவதும் மதிமுக தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர் என்றார்.தொடர்ந்து மதிமுக தலைவர் வைகோ பேசும் போது நாங்கள் திமுக கூட்டணியில் இல்லை என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் சொல்லட்டும் என்று வைகோ கேள்வி எழுப்பினார்.அதை தொடர்ந்து மதிமுக நடத்தும் ஆளுநர் அலுவலக முற்றுகை போராட்டத்துக்கு திமுக ஆதரவு என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது நாங்கள் தற்போது நண்பர்களாக இருக்கிறோம் கூட்டணியாக தொடர் வேண்டும் என்று விரும்புகின்றோம் இந்த அரசை வீழ்த்தவேண்டுமென்றால் மதசார்பற்ற அணிகள் ஓரணியில் இணைந்து திமுக , காங்கிரஸ் , முஸ்லீம் லீக் , மதிமுக , விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகள் என மத சார்பற்ற அணிகள் கூட்டணியாக அமையும் விரைவில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைவர் அறிவிப்பார் என்றும் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நடத்தும் தேசம் காக்கும் மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பார் என்றும் தெரிவித்தார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி_யும் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுதாகர் ரெட்டி_யும் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசிய சுழலில் இன்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் , திமுக.தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து வருகிறாரார்.இந்த சந்திப்பு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
DINASUVADU.COM