பயத்தில் மோடி ஒத்திவைத்த அறிவியல் மாநாடு…??

Default Image

இந்திய வரலாற்றில் முதல் முறையாக, பிரதமருக்கு எதிராக மாணவர்கள் போராடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்திய விஞ்ஞானிகளின் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இந்திய விஞ்ஞானிகளின் சங்கமமான ‘இந்திய அறிவியல் மாநாடு’ நடைபெறுவது வழக்கம்.

ஜனவரி மாதத்தில் இந்த நிகழ்வு பிரதமரின் பணிப் பட்டியலில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். எதிர்வரும் ஜனவரி 3-7 தேதிகளில் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொடர்ந்து தலித் விரோத திட்டங்களை செயல்படுத்தும் மத்திய பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்து பிரதமர் வருகையின் போது மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து பல்கலைக் கழக நிர்வாகம் அச்சமடைந்துள்ளது .

தெலுங்கானா மாநிலம் அமைந்த பிறகு அதற்காக மிகப்பெரும் வன்முறைகளை நடத்திய சந்திர சேகர ராவ் அரசு தங்களை வஞ்சித்து விட்டதாக மாணவர்களிடையே கொந்தளிப்பு நிலவுகிறது. இந்த பின்னணியில் மாநாட்டை நடத்த இயலாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறியதைத் தொடர்ந்து மாநாடே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மோடியின் அராஜகங்களும் அவரது அரசின் மோசமான கொள்கைகளும் அறிவியலையே புறக்கணித்தவை.

இப்போது இவர்களால் அறிவியல் மாநாடே நடத்த முடியவில்லை. நூறு ஆண்டுகளில் முதல்முறையாக இந்தநிலை. யார் பொறுப்பு?

– சிபி எம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்