பனிப்பாறைகளில் சிக்கிய படகு ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியது..!
அர்ஜெண்டினா அருகே கடல் பகுதியில் பனிப்பாறைகளில் சிக்கிய படகு ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியது.
பாடகோனியா பெருங்கடல் ((Patagonia Ocean)) என்பது அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்து பகுதியைப் போல பனிப்பாறைகள் நிறைந்த இடமாகும். உலகில் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு ஊதா நிற பனிப்பாறைகள் பாடகோனியா கடல் பகுதியில் அதிக அளவில் காணப்படும்.
இதனைக் காணவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் ஏராளமான விஞ்ஞானிகள் இந்தக் கடலுக்கு வருவது வழக்கம். இதேபோல் ஒரு குழுவினர் ஊதா நிற பனிப்பாறைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது நீருக்குள் அமிழ்ந்திருந்த பெரிய அளவிலான பனிப்பாறை திடீரென படகினை மோதுவது போல் வெளிக்கிளம்பியது. அப்போது சுதாரித்துக் கொண்ட படகோட்டி சாதுர்யமாக படகினை நகர்த்தி தப்பினார்.