பதக்கம் பறிக்கப்பட்டாலும் பதக்கம் பெற்றவராக வரவேற்கப்படுவார்: தமிழக வீரருக்கு சேவாக் ஆறுதல்.

Default Image

இந்னோசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர் லட்சுமணன் ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் 29 நிமிடம் 44:91 வினாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் பெற்றார். ஆனால் சில நிமிடங்களில் லட்சுமணன் தனது டிராக்கிலிருந்து மாறி தடத்துக்கு வெளியே கால் வைத்ததால் தகுதியிழப்பு செய்ததாக அறிவிக்கப்பட்டு அவரது பதக்கமும் பறிக்கப்பட்டது. பதக்கத்தை இழந்தபோதிலும் லட்சுமணனுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் ஆறுதல்களும் கிடைத்தது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது ட்விட்டரில் லட்சுமணனுக்கு ஆறுதல் கோரியுள்ளார்.

“10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வங்காள பதக்கம் வென்று பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட லட்சுமனுக்காக உண்மையாகவே வருந்துகிறேன். நான்கு வருட கடினமான முயற்சி எளிதாகக் கடந்து விட்டது. அவர் நாடு திரும்பும் பொது வெற்றி பெற்றவராக வரவேற்கப்படுவார்” என்று ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். இந்த ட்வீட்டுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்