படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து கடும் 'மத' சிக்கலில் மாட்டிக்கொண்ட பாலிவுட் நடிகை!
நானி ஹீரோவாக நடித்து தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரான ஆஹா கல்யாணம் படத்தில் ஹீரோயினாக நடித்து இருப்பவர் வாணி கபூர். இவர் பாலிவுட்டில் சில படங்கள் நடித்து உள்ளார். அண்மையில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் மெகா ஹிட்டான வார் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இவர் அண்மையில் ஒரு போட்டோஷூட் நடத்தியிருந்தார். அந்த போட்டோக்களில் மிகவும் கவர்ச்சியாக இருந்தார். ஆனால் அவர் அணிந்திருந்த மேலாடையில் ஹிந்தியில் ராம் என குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக மும்பை NM ஜோஷி மார்க் எனும் போலீஸ் ஸ்டேஷனின் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மேலாடையில் ராம் என எழுதி அந்த மேலாடையை மிகவும் கவர்ச்சியாக உடல் பெரும்பகுதி தெரியும் வண்ணம் உடுத்தி, கடவுள் ராம் பகவானை இழிவுபடுத்தியுள்ளதாகவும், அதனால் வாணி கபூர் மீது 215 (A) சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தண்டிக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளத.
இதனை தொடர்ந்து வாணி கபூர் மீது FIR பதிவு செய்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாம்.