படிப்பை தட்டி பறித்த திரைத்துறையில் 'கலைசெல்வி' பட்டம் பெற்ற ஜெயலலிதா…!!
ஜெ.ஜெயலலிதா ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனால் கல்லூரி படிப்பை விட்டுவிட்டு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து நடிகையானார்.இவரின் முதல் படம் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.ஜெயலலிதா இதுவரை தமிழ் , மலையாளம் , தெலுங்கு என 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.ஜெ.ஜெயலலிதா நடிகர் எம்.ஜி.ஆருடன் மட்டும் மொத்தம் 28 படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் முன்னணி நடிகர்களாக விளங்கிய சிவாஜி கணேசன் , ஜெய்சங்கர் , எஸ்.எஸ் ராஜேந்தரன் , முத்துராமன் , சிவகுமார் என பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்து மக்கள் மத்தியின் தனக்கான இடத்தை உருவாக்கி கொண்டார்.அந்த காலத்தில் மக்கள் பலரும் ஜெயலலிதாவின் நடிப்பை வெகுவாக ரசித்தார்கள். இவரது நடிப்பை பாராட்டி இவருக்கு ‘கலைசெல்வி’ என்ற பட்டத்தை அளித்தார்கள்.தன் நடிப்பின் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.
dinasuvadu.com