நேபாளத்தில் தேங்கியுள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள்..! இந்திய வருகையின்போது வலியுறுத்த நேபாள பிரதமர் முடிவு …!
நேபாள பிரதமர் உயர் பண மதிப்பிழப்புக்குப் பின் தங்கள் நாட்டில் தேங்கியுள்ள இந்திய ரூபாய் நோட்டுக்கள் சுமார் 950 கோடி ரூபாயைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு இந்தியாவை வலியுறுத்தவுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு இந்திய அரசின் உயர்பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், வர்த்தக உறவில் ஈடுபட்டிருந்த நேபாள நாட்டு வணிகர்களிடம் இந்திய ரூபாய் நோட்டுக்கள் தேங்கிவிட்டன. அதை புழக்கத்தில் விட முடியாது என்ற சூழலில் இந்திய அரசே திருப்பி எடுத்துக் கொண்டு செல்லத்தக்க நோட்டுக்களைத் தருமாறு அந்நாட்டின் NRB தேசிய வங்கியின் துணை ஆளுநர் சிந்தாமணி சிவகோடி, ஆர்.பி.ஐ. அதிகாரிகளிடம் கடந்த மாத சந்திப்பின் போது வலியுறுத்தினார்.
இந்நிலையில், நாளை இந்தியா வரும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ((K.P. Sharma Oli)), குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளார். சந்திப்பின் போது இந்திய அரசிடம் 950 கோடி ரூபாயைத் பெற்றுக் கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை வழஙகுமாறு வலியுறுத்தப்போவதாக அவர் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.