நேபாளத்தில் இந்திய அரசின் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு தடை : இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் பாதிக்கப்படுமா?
இந்திய அரசின் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்துள்ளதால் இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 2020-ல் விசிட் நேபாள் என்ற திருவிழா நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்திய ரூபாய் நோட்டுகளான 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல் மற்றும் தொடர்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேபாள மக்கள் இந்திய நாட்டின் உயர் மதிப்பு நோட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டாம் என்றும் மாறாக, இந்திய அரசின் 100 ரூபாய் நோட்டுகள் மட்டும் புழக்கத்துக்கு பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா நேபாளம் இடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலா போன்றவை கடும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது.