நெய் அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகமாவது உண்மையா !!
பொதுவாக நிறைய வீடுகளில் செய்யும் உணவு பொருட்களில் நெய் சேர்த்து செய்கின்றனர்.பண்டிகை காலங்களில் சொல்லவே வேண்டாம் அனைத்து பொருட்களிலும் நெய் சேர்த்து தான் செய்வார்கள்.சில நபர்கள் நெய் சேர்த்தால் கொஞ்சம் அதிமுகமாகவே உணவு உட்கொள்வார்கள்.இவ்வாறு நெய் எடுத்துக்கொள்வதால் உடல் எடை அதிகமாகும் என்று ஒருசிலர் கூறுவர்.அதை பற்றி காண்போம்.
பொதுவாக மாடுகள் பால் அதிகமாக சுரப்பதற்கு ஆக்சிடோசின் என்ற ஊசி போடுகின்றனர்.இந்த ஊசி போவதால் மாடுகளுக்கு பால் அதிகமாக சுரப்பது மட்டுமல்ல பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.ஒருநாளைக்கு 2 முறை இந்த ஊசி மாடுகளுக்கு போடா படுகின்றன.இதனால் அந்த மருந்தின் வீரியம் பாலிலும் கலக்கும். இவ்வாறு கிடைக்கும் பாலில் இருந்து தான் நாம் நெய் தயாரித்து உபயோகபடுத்துகிறோம்.
ஆயுர்வேதத்தில் பசுமாட்டின் நெய் தான் உடலுக்கு சிறந்தது என்று கூறுகின்றனர்.ஆனால் அதிகமாக எருமை மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலில் இருந்து தான் நெய் நமக்கு கிடைக்கின்றது.எருமைமாடுகளில் இருந்து கிடைக்கும் நெய்களில் அதிக கொழுப்பு சத்துக்கள் உள்ளது.இவை நமது உடலில் எல் டி எல் கொழுப்பை அதிகமாக வரவைத்து இதயநோய்க்கு வழிவகுக்கிறது.
நெய் ஆரோக்கியமான உணவு பொருளாக இருந்தாலும் அதனை உட்கொள்ளும் போது நமது உணவு சூடாக தான் இருக்க வேண்டும்.காலை மாலை இரவு நேரங்களில் நெய் உபயோக படுத்த கூடாது என்று கூறுகின்றனர்.ஆனால் தற்போது நாம் உண்ணும் அணைத்து உணவு பொருளிலும் நெய் கலந்து தான் உட்கொள்கிறோம்.இவ்வாறு உட்கொள்வது நமது வடக்குக்கு அதிக கேடு விளைவிக்கும்.எனவே சரியான உணவை உட்கொள்ள வேண்டும்.மதியம் நாம் சாப்பிடும் போது ஒரு ஸ்புன் நெய் சேர்த்து சாப்பிட்டால் அது உடலுக்கு நல்ல சுறுசுறுப்பு கொடுக்கும்.
சிலருக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அவர்கள் தங்களது உணவில் நெய் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு நெய் சாப்பிட வேண்டும் என்றால் பசு நெய் உட்கொள்ளுங்கள்.அவ்வாறு எடுத்துக்கொண்டால் தான் உடல் பருமன் அதிகமாகாது.