நெதர்லாந்தில் பெரிய முதலாளிகள் மட்டுமே இரட்டைக் குடியுரிமையாமே…ஏன்…????
நெதர்லாந்தில் சாதாரண மக்கள் இரட்டைக் குடியுரிமை வைத்திருக்க அனுமதி இல்லை. ஆனால் மிகப் பெரிய நிறுவனங்களான Shell, Unilever இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கின்றன. அதாவது தலைமை நிர்வாகிகளும் தான்.
Shell, Unilever இரண்டும் நெதர்லாந்தை “தாயகமாக” கொண்டு உருவாகி பிரித்தானியாவிலும் தளம் அமைத்தன. பிரிட்டனில் இலாபத்திற்கு வரி கட்டுவதில்லை. அதனால் பெருமளவு இலாபத்தை பிரிட்டனில் கணக்குக் காட்டுவதால் வரி கட்டுவதில்லை.
பெரிய முதலாளிகள் இரட்டைக் குடியுரிமை வைத்துக் கொண்டு இலாபத்திற்கு வரி கட்டாமல் தப்ப முடியும். அதற்கு சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் சிறு முதலாளிகளுக்கு அந்த சலுகை கிடையாது.
எதற்காக இந்த நாடுகளை முதலாளித்துவ (Monopoly capitalism) நாடுகள் என்று சொல்கிறார்கள் என்பது இப்போது புரிந்திருக்க வேண்டும். அதன் அர்த்தம் இந்த நாடுகளில் “அனைத்து முதலாளிகளுக்கும் சுதந்திரம் உண்டு” என்பதல்ல. ஒரு சில பெரிய முதலாளிகள் மட்டும் விசேச சலுகைகளை அனுபவிக்கிறார்கள்.