நெதர்லாந்தில் சிறந்து விளங்கும் பன்றிகளின் சரணாலயம்!
கடந்த 22 ஆண்டுகளாக நெதர்லாந்தில் இயங்கிவருகிறது பன்றிகலின் சரணாலயம். இங்கே கசாப்புக் கடைகளில் இருந்து மீட்கப்பட்ட பன்றிகள், நோய்வாய்ப்பட்ட பன்றிகள், ஆதரவற்ற பன்றிகளுக்கு நல்ல சூழ்நிலை, நல்ல உணவு, மசாஜ் போன்றவை அளிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
இந்நிலையில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் இயங்கும் இந்த சரணாலயத்தை டேபின் வெஸ்டர்ஹோப் என்ற விலங்குகள் நல ஆர்வலர் நடத்தி வரு கிறார். கடந்த 20 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பன்றிகளைக் காப்பாற்றி, நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
இங்கு ‘‘பண்ணையைச் சுத்தம் செய்வது, பன்றிகளுக்கு மசாஜ் செய்வது, குளிப்பாட்டுவது, விளையாடுவது என்று நாள் முழுவதும் வேலை இருந்துகொண்டே இருக்கும். உடல் நலம் குன்றிய பன்றிகளை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வைத்திருக்கின்றனர். எங்கள் சரணாலயத்துக்குப் பார்வையாளர்கள் அதிகம் பேர் வரு கிறார்கள்.
இந்நிலையில் பார்வையாளர்கள் பன்றிகளுடன் பழகலாம், மசாஜ் செய்துவிடலாம், விளையாடலாம், உணவளிக்கலாம். சில பன்றிகள் வாடிக்கையாளர்களை நினைவில் வைத்துக்கொண்டு, அவர்களைக் கண்டதும் மசாஜ் செய்து விடச் சொல்கின்றன, கட்டிப் பிடிக்கச் சொல்கின்றன. பன்றிகளும் செல்லப் பிராணியாக வளர்க்க ஏற்ற விலங்குகள்தான்.
இங்கு மறதி நோய், மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட பன்றிகளைத் தனியே வைத்திருக்கின்றனர். அவற்றை யாரும் தொந்தரவு செய்ய அனுமதிப்பதில்லை. எங்களின் சேவையைப் பார்த்து ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் நன்கொடை அளிக்கிறார்கள்” என்கிறார் டேபின் வெஸ்டர்ஹோப்.