நீலகிரி: மாவட்டம் உதகையில்தேயிலை திருவிழா தொடங்கியது..!!
நீலகிரி மாவட்டம் உதகையில் தேயிலைக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், தேயிலை திருவிழா தொடங்கியது. தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில், 1992-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் விழாவில், பிளாக் டீ, ஒயிட் டீ, சில்வர் டிப்ஸ், ஆர்கானிக் டீ என பல்வேறு தேயிலை வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் பசுந்தேயிலை வழங்கிய விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், கர்நாடகாவின் டோளு குனிதா என்ற பாரம்பரிய நடனமும் இடம்பெற்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்