நீதிமன்றம் அதிரடி : "நக்கீரன் கோபால் விடுதலை" வழக்கு இரத்து ..!!
நக்கீரன் கோபால் கவர்னரை பற்றி தவறாக எழுதியுள்ளதால் கவர்னரின் பணி பாதிக்கபட்டுள்ளது எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற ஆளுநர் அலுவலக ஆணைக்கிணங்க இன்று காவல்துறை அவரை கைது செய்து அவர் மீது 124 என்ற பிரிவின் கீழ் தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இது தமிழக அரசியலில் கடுமையான எதிர்ப்பை உண்டாக்கியது,நக்கீரன் கோபால் கைதை கண்டித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.நக்கீரன் கோபாலை விடுதலை செய்ய வேண்டும் , அவர் மீதுபோடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து நக்கீரன் கோபாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்ய ஆஜர்படுத்தப்பட்டார்.விசாரணை நடத்திய நீதிபதி நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட 124 வழக்கு மீது எந்த முகாந்திரமும் இல்லை என்று 124 வழக்கை இரத்து செய்தார்.
அது மட்டுமில்லாமல் கவர்னரே என்மீது தவறாக எழுதி உள்ளது என்று கவர்னர் சொல்லியதாக இதில் இல்லை.கவர்னர் பணி பாதித்துள்ளது என்றால் எந்த பணி பாதிக்கப்பட்டது என்று இதில் இல்லை ,என்று நீதிபதி கேள்வி எழுப்பினர். வழக்கை விசாரித்த நீதிபதி சரியான ஆதாரம் இல்லாததால் நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க வேண்டும் என்ற அரசு வக்கீலின் கோரிக்கையை ஏற்கமுடியாது என்று கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.
DINASUVADU