நீட் தேர்வை பற்றி நீங்க மட்டும் பேசாதீங்க : அனிதாவின் சகோதரர் அதிரடி
பா.சிதம்பரம், காங்கிரஸ் அரசு அமைந்தால் ‘நீட்’ தேர்வு கிடையாது. பாஜக அரசு அமைந்தால் ‘நீட்’ தேர்வு தொடர்ந்து இருக்கும். இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18 என்று தெரிவித்துள்ளார்.
இவரது இந்த கருத்திற்கு, அனிதாவின் சகோதரர் தனது முகநூல் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அப்படியே உங்க மனைவி நளினி சிதம்பரத்திற்கு தெளிவுபடுத்தி விடுங்க அய்யா… நீட் வேணும்னு கோர்ட்டுக்கு கட்டு தூக்கிட்டு போய்ட போறாங்க, நீட் தேர்வைப் பத்தி மட்டும் நீங்க பேசாதீங்க சிதம்பரம் என்று குறிப்பிட்டுள்ளார்.