நிலவில் கால் வைத்தார்கள் என்பது கட்டு கதையா..? சர்சையை கிளப்பும் வீடியோ..!!

Default Image

நிலவில் மனிதன் கால்பதித்தது மானுடகுலத்தின் ஆக உயர்ந்த சாதனையாகக் கருதப்பட்டு வரும் நிலையில் நிலவில் மனிதன் கால்வைத்தது உண்மையில்லை என்ற இன்னொரு வீடியோ வெளியானது.
நிலவில் மனிதன் கால்பதித்தான் என்பது பொய், அது ஏதோ ஒரு இடத்தில் ஷூட்டிங் எடுக்கப்பட்டதாகும் என்றும், நாசா உண்மையைக் கூறவில்லை என்றும் பலரும் விமர்சித்தே வந்துள்ளனர்.1969ஆம் ஆண்டு அப்பல்லோ நிலவில் இறங்கியதிலிருந்தே பலரும் நிலவில் மனிதன் கால் வைத்ததாகக் காட்டப்படும் வீடியோ போலியானது, நாசா ஏமாற்றுகிறது என்று விமர்சித்து வந்தார்கள்.
சமீபத்தில் நிலவில் கால் வைத்த விண்வெளி வீரர்களின் ஹெல்மெட்டின் கண்ணாடியில் பலரது உருவங்கள் தெரியும் வீடியோ ஒன்று வெளியானது.இந்நிலையில் 1966க்கும் 72க்கும் இடையே படம் பிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் இன்னொரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது
அந்த வீடியோவில் நிலவின் பரப்பு போன்று காணப்படும் ஒரு இடத்தில் படம் எடுப்பவர்கள் தங்கள் கமராக்களை தயாராக வைப்பது தெரிகிறது.ஒரு விண்வெளி வீரர் அமெரிக்க கொடியை நடும்போது இயக்குநர் ஒருவர் ரெடி, ஆக்‌ஷன் என்று கூறும் குரலும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இன்னொரு காட்சியில் அப்பல்லோ விண்கலம் போல் காணப்படும் ஒரு பொருளைச் சுற்றி படப்பிடிப்புக் குழுவினர் நிற்பது தெரிகிறது.ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் மூவரும் விண்கலத்தை நோக்கி செல்லும்போதும் ரெடி, ஆக்‌ஷன் என்று கூறும் குரல் ஒலிக்கிறது.
மானுட குலத்தின் ஆகச்சிறந்த அறிவியல் உச்சம் என்று கருதப்பட்டு வருவது ஏமாற்றுவேலையா என்ற எதிர்க்கருத்துக்கள் இத்தகைய வீடியோவினால் உருவாகி வருகின்றன.
DINASUVADU 
https://youtu.be/bD6QcpLAno8

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்