நியூசிலாந்தில் நிலநடுக்கம்….!!
நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
நியூசிலாந்தில் உள்ள டாமரூனியில் இருந்து தென்மேற்கில் சுமார் 25 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 165 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் தலைநகர் வெலிங்டன் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுமார் 30 வினாடிகள் அதிர்வு இருந்தது. கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். இதேபோல் வடக்கு தீவு, தெற்கு தீவு என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது.
மேலும் நியூசிலாந்து நாடாளுமன்றம் கட்டிடம் நிலநடுக்கத்தால் குலுங்கியது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
dinasuvadu.com