நியூசிலாந்திலிருந்து, பிரேசிலுக்கு சாகசப் பயணம்.!
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரிலிருந்து பிரேசிலின் Itajai துறைமுகத்திற்கு பாய்மரப் படகில் செல்லும் சாகசப் பயணம் தொடங்கியது.
காற்றின் திசையும், வேகமும் சாதகமாக இருப்பதை கணித்து பாய்மரப் படகை இயக்குகின்றனர். மக்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு பாய்மரப் படகில் செல்வோருக்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தனர்.
பாய்மரப்படகுகளுக்கு உதவியாக மீட்புக்குழுவினரும் சிறு படகுகளில் பின் தொடர்ந்து சென்றனர். இரு நகரங்களுக்கிடையிலான 7 ஆயிரத்து 600 நாட்டிக்கல் மைல் தூரத்தை சிலவாரங்களில் பாய்மரப்படகில் கடந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.