நாடாளுமன்ற தேர்தல் விவாதிக்க அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது…!!
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்க அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது
அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையிலும், கட்சியின் ஒருங்கினைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையிலும் இன்று மாலை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் உள்ள இந்த கூட்டத்திற்கு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், எதிர்வரும் மக்களவைத் தேர்தல், 20 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளனர்.