நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி…!இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங் மகிழ்ச்சி …!
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், ரணிலுக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 76 வாக்குகளும் பதிவாகின.
26 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் 12 மணி நேரமாக விவாதம் நடத்தப்பட்டு எதிர்க்கட்சிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்க்கட்சித் தலைவரான முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.