நாசா:11 லட்சம் பேரின், பெயர்களைத் தாங்கிய விண்கலம் சூரியனுக்கு புறப்படுகிறது..!!
11 லட்சம் பேரின், பெயர்களைத் தாங்கிய விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனுக்கு அனுப்ப உள்ளது. சந்திரன், செவ்வாய் கோள்களில் ஆய்வு நடத்துவதைப் போல, சூரியனைப் பற்றியும் ஆய்வு செய்வதற்காக விண்கலத்தை அனுப்ப நாசா முயன்று வருகிறது. இதற்காக சூரியனின் வெப்பத்தை தாங்கும்வகையில் பிரத்யேகமான விண்கலத்தை நாசா வடிவமைத்துள்ளது.
இந்த விண்கலம் வருகிற ஜூலை மாதம் 31-ஆம் தேதி சூரியனுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த விண்கலத்தில், தங்கள் பெயர்களை பொறிக்க மக்களுக்கு கடந்த மார்ச் மாதம் நாசா அழைப்பு விடுத்திருந்தது. அதன்பேரில், 11 லட்சத்து 37 ஆயிரத்து 202 பேரின் பெயர்கள் பெறப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன. இத்தனை பெயர்களையும் தாங்கியவாறு, பிரத்யேக விண்கலம் சூரியனுக்கு பயணிக்க உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்