நாகரீகம் இல்லாமல் நடுவரை விளாசிய செரீனா…!!!

Default Image

நேற்று வாஷிங்டனில்  நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் 6-2, 6-4 எனும் நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி ஜப்பனின் நவோமி ஒசாகா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்இந்த போட்டியின் போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரீனா வில்லியம்ஸ் மிகவும் கோபத்துடன் நடுவரை தீட்டி வசைபாடினார்.மேலும் அவர் 3 விதிமுறை மீறலில் ஈடுபட்டார்.

Related image

முதலில் அவரது பயிற்சியாளர் சைகை மூலம் ஆட்டம் நுணுக்கம் பற்றி விவரித்தார். ஏடிபி போட்டிகளில் பார்வையாளர் வரிசையில் இருந்து பயிற்சியாளர் ஆலோசனைகள் தெரிவிக்கலாம். ஆனால் கிராண்ட்சிலாம் போட்டிகளில் அதற்கு அனுமதி இல்லை. 2-வதாக டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தது. செரீனாவின் இந்த செயலுக்காக நடுவர் பெனால்டி நடவடிக்கை எடுத்து செரினாவின் புள்ளியை குறைத்தார்.

Image result for american open tennis

3-வதாக நடுவர் ராமோஸ் ஒரு பொய்யர். என்னிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்கிறார், என்னுடையை புள்ளியை பறித்த அவர் ஒரு திருடர் என கோபத்தில் நடுவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். இந்நிலையில், செரினாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்துள்ள அமெரிக்க டென்னிஸ் சங்கம் அவருக்கு அபராதம் விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Image result for SERINA ANGRY IMAGE

நடுவரை நோக்கி கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு ரூ.7 லட்சத்து 21 ஆயிரம் (10 ஆயிரம் அமெரிக்க டாலர்), பயிற்சியார் சைகை செய்ததற்கு ரூ. 2 லட்சத்து 88 ஆயிரம் (4 ஆயிரம் அமெரிக்க டாலர்), டென்னிஸ் ராக்கெட்டை வீசி எரிந்ததற்கு ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் (3 ஆயிரம் அமெரிக்க டாலர்) என மொத்தம் ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது..அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டிக்கு முன்னேறிய செரினா வில்லியம்ஸ்க்கு பரிசுத்தொகையாக ரூ.13 கோடி தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்