நரம்புகள் நலம்பெற செவ்வாழை : சாப்பிட்டு தான் பாருங்களேன்….!!!
வாழைப்பழம் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு அற்புதமான பழம். செவ்வாழை சாப்பிடுவதால் கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். குறிப்பாக நீரிழிவு நோய்க்கு மிகவும் நல்லது.
நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செவ்வாழை மிகச்சிறந்த மருந்தாகும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டுவர நரம்பு சம்பந்தமான நோய்கள் குணமாகும். செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதயநோய், மற்றும் புற்றுநோய் தாக்குதலை தடுக்கிறது.
செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரி குறைவாக உள்ளது. அதனால் எடையை குறைக்க நினைப்போர் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வர, பசி அதிகம் எடுப்பதை தடுக்கிறது.
குழந்தைகள் இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு, அரை டீஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர கருத்தரிக்கும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.