நம் முன்னோர்கள் அறிந்துவைத்திருந்த வாழை இலையின் ரகசியம்!
நமது முன்னோர்கள் அனைவரும் வாழை இழையில் வைத்து தான் உணவுகளை உட்கொண்டனர்.அது தமிழர் பாரம்பரியம் மட்டுமல்ல அதில் பல மருத்துவ குணங்களும் உள்ளன.அனால் நாம் காலா போக்கில் வாழை இலையில் சாப்பிடுவதை மறந்து விட்டோம்.வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை காண்போம்.
அல்சருக்கு தீர்வு
தற்போது உள்ள காலத்தில் அதிகமான நபர்களுக்கு அல்சர் உள்ளது.வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் இது குணமாகும்.ஒருவர் வாழை இலையில் தொடந்து சாப்பிட்டுவந்தால் இரைப்பை மற்றும் முன் சிறுகுடலில் உள்ள புண்களை கரைத்து புதிய செல்களை தோற்றுவிக்கிறது.இதனால் அல்சர் கொஞ்சம் கொஞ்சமா குணமடையும்.
விஷத்தை முறிக்கும் வாழைஇலை
நாம் உண்ணும் உணவு கெட்டுப்போயிருந்தாலோ அல்லது அதில் விஷம் ஏதும் கலந்திருந்தாலோ அந்த உணவுப்பொருளை வாழை இலையில் வைக்கும் போது வாழை இலையின் தன்மை ஒரு புதிய நிற நீரை உற்பத்தி செய்து அது சாப்பிட உகந்த உணவு இல்லை என்பதை நமக்கு காட்டிக்கொடுத்துவிடும்.நாம் உணவு உண்ணும் போது எந்த வித பயமும் இல்லாமல் உட்கொள்ளலாம்.
கண்ணுக்கு நல்லது
நாம் தொடர்ந்து வாழை இலையில் உணவு உட்கொள்ளும் போது வாழை இலையில் இருக்கும் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் செம்புச் சத்துகள் கண்களுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றது. மேலும் தோல் பளபளப்பாக இருக்கவும் பசி இன்மையை போக்கவும் உதவுகிறது.
ஆகையால் நாகரிகஉலகிற்கு ஏற்றவாறு மாறினாலும் நாம் உண்ணும் உணவினை சரியான விதத்தில் உட்கொண்டால் உடலில் ஏற்படும் நோய்களை தடுக்கலாம்.