நந்திதாவின் ‘IPC376’ படத்தின் டிரைலர் எப்போது தெரியுமா.!
நடிகை நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகும் IPC376 திரைப்படத்தின் டிரைலர் ஜூலை 2 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நந்திதா தனது சினிமா வாழ்க்கையை கன்னட படத்தின் மூலம் ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானார் நந்திதா. தற்போது இவர் சிபிராஜூடன் கபடதாரி படத்திலும், விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் படத்திலும் நடித்து முடித்துள்ளார். அது மட்டுமின்றி பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த IPC376 என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.
ராம்குமார் சுப்பராயன் எழுதி இயக்கும் IPC376 படத்தினை எஸ். பிரபாகர் தயாரிக்கிறார். யாதவ் ராமலிங்கம் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகியுள்ள IPC376 படத்தின் டிரைலர் வரும் ஜூலை 2ம் தேதி வெளியாகவுள்ளதாக தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். . இந்த திரைப்படம் நந்திதாவிற்கு புதிய திருப்பமாக இருக்கும் என்று கருதப்படுகிறது..