நடைபயிற்சியின் நலன்கள் !!

Default Image

நவீன வாழ்க்கை முறையே மனஉளைச்சல், உடல் பருமன், போன்றவை ஏற்பட   காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நடைபயிற்சி இல்லாததும் இதற்கு ஒரு காரணம். நடப்பதை தவிர்த்து இருசக்கர வாகனங்கள், பஸ்களில் பயணிப்பது, படிகளில் ஏறுவதை விட்டு லிப்ட்களில் செல்வது அனைவரின் வாடிக்கையாகிவிட்டது.  உடலில் கலோரி சத்து அதிகமாக சேரும் போது நடைபயிற்சி இல்லாததால் உடலில் உள்ள கலோரி சத்து குறையாமல் உடல் பருமனாகி நோய்கள் ஏற்பட்கின்றன.

உலகளவில் வளர்ந்த  நாடுகளில் எடுக்கப்பட்ட சோம்பேறிகள் ஆய்வு பட்டியலில் இந்தியா 39-வது இடத்தில் உள்ளது. ஒரு நாளைக்கு இந்தியர்களில் ஆண்கள் 4 ஆயிரத்து 606 அடிகளும், பெண்கள் 3 ஆயிரத்து 684 அடிகளும் மட்டுமே நடப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஒரு மனிதன் கண்டிப்பாக ஒரு நாளைக்கு 6 ஆயிரம் அடிகளுக்கு மேல் நடந்தால் அவர்களை நோய்கள் எதுவும் தாக்காது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். ஹாங்காங், சீனா, ஜப்பான், உக்ரைன் நாடுகளில் உள்ள  மக்கள் தினமும் 6 ஆயிரம் அடிகளுக்கு மேல் நடைபயணம் செய்கின்றனர்.. இதனால் அவர்கள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள்.

தினமும் காலையில் 1 மணி நேரம் நடக்கும்போது வைட்டமின் ‘டி’ அதிகமாக உடலுக்கு கிடைகின்றது. சுவாச காற்று சீராகும். கைகளை நீட்டி நடக்கும்போது 50 முதல் 100 கலோரி செலவாகிறது. வாரத்தில் 5 நாட்கள் நடைபயிற்சி செல்வது ஆரோக்கியம் தரும். இதய பாதிப்பு உள்ளவர்கள் மெதுவாக நடக்க வேண்டும்.

இன்சுலின் ஊசிபோட்டவுடன் நடைபயிற்சி செய்ய கூடாது. எந்த காரணத்தைக் கொண்டும் சாப்பிட்ட உடன் நடக்கக்கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்