நடுவானில் விமானம் மோதல்…விமானி பரிதாப பலி..!!
கனடாவில் நடு வானில் விமானங்கள் மோதிக்கொண்டன. இதில் விமானி ஒருவர் பலியானார்.
கனடாவின் ஒட்டாவா நகர் அருகே கார்ப் என்ற பகுதியில் நேற்று ஒரு விமானம் பறந்துகொண்டிருந்தது. அப்போதே வான் பகுதியில் வந்த மற்றொரு சிறிய ரக விமானம், திடீரென அந்த விமானத்தின் மீது மோதியது. இதனால் இரண்டு விமானங்களும் நிலை குலைந்து தரையை நேக்கி பாய்ந்தன.
இதில், சிறிய ரக விமானம் சாலையோரம் உள்ள புல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இதில் பைலட் உயிரிழந்தார். அந்த விமானத்தில் அவர் மட்டுமே பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மற்றொரு விமானத்தின் பைலட், விமானத்தை சாமர்த்தியமாக திருப்பி ஒட்டாவா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார். இதனால் அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
dinasuvadu.com