நடுவானில் பறந்த விமானம் திடீரென தரை இறக்கம் ..!
ஜெர்மனியில் உள்ள பான்க்ரப்ட் நகரில் நடு வானத்தில் காற்றழுத்தம் குறைந்ததால் ரயன் விமானம் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது .ரயன்(RYAN AIR) விமானம் அயர்லாந்தின் டப்ளின் நகரில் இருந்து 189 பயணிகளுடன் குரேசியா நோக்கி சென்றது.
சுமார் 11 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென காற்றழுத்தம் குறைந்ததால் அவசர அவசரமாக விமானம் ஏழு நிமிடங்களில் 8000 உயரத்திற்கு கீழே இறக்கப்பட்டது .இதனால் பயணிகள் சிலரின் காதில் இருந்து ரத்தம் வந்தது .பின்னர் அவசரமாக விமானம் ஜெர்மனியின் பான்க்ரப்ட் நகரில் இறக்கப்பட்டது .விமானத்தில் பயணித்த 30 க்கும் மேற்பட்ட பயணிகள் உடல் நலக்குறைவால் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டனர் .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.