நடுவரை திருடன் என்று விமர்ச்சித்த செரீனாவுக்கு என்ன நடந்தது….?
அமெரிக்க ஓபன் டென்னிஸின் இறுதி போட்டியின் பொது, போட்டி நடுவரை தரக்குறைவாகப் பேசியதற்கு செரினா வில்லியம்ஸுக்கு 17,000 அமெரிக்க டாலர் அபராதமாக விதித்து, அமெரிக்க டென்னிஸ் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸின் இறுதி போட்டியில், செரினா வில்லியம்ஸும், ஜப்பான் வீராங்கனை ஒசாகாவும் மோதினர். அந்தப் போட்டியின் பொது, நடுவர் செர்ஜியோ ரமோஸ் செரீனாவுக்கு எதிராகப் புள்ளிகள் வழங்கியபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நடுவரிடம் முறையிட்ட செரினா, நடுவரை ‘திருடன் ‘ என்று திட்டினார். தாம், விளையாடும் இந்தப் போட்டியிலும் ரமோஸ் நடுவராஹா இருக்கக் கூடாது என்று கடுமையாகச் சாடினார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடுவரை தரக்குறைவாக பேசியதற்காக, அமெரிக்க டென்னிஸ் ஆணையம் செரினா வில்லையம்ஸுக்கு 17,000 அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளார்.