நடுங்குகிறது ஜப்பான் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி..!!
டோக்யோ: ஜப்பானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளன.
ஜப்பான் வடக்கு பகுதியான ஹொக்கைடோ என்னும் தீவு உள்ளது. இங்கு இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. அது ரிக்டர் அளவுகோலில் 6.7 என பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் சுமார் 40 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டதாக அந்நாட்டு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹெக்கைடோ தீவின் தலைநகரான சப்போரோ தான் நிலநடுக்கத்தின் காரணமாக அதிகளவு பாதிப்படைந்திருப்பதாக கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு மின்சார இணைப்புகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 3 மில்லியன் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. மேலும், பல வீடுகள் இடிந்து நாசமாகின.
இதையடுத்து, மண் சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிலநடுக்கத்தின் காரணமாக மக்கள் தங்களின் இருப்பிடத்தை இழந்து, தவித்து வருகின்றனர். தற்போது அவர்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
DINASUVADU