"நடிகர் கருணாஸுக்கு ஜாமீன்" உயர்நீதிமன்றம் அதிரடி…!!
2017 ஆம் ஆண்டு புலித்தேவர் பேரவை தலைவர் காரை சேதப்படுத்தியதாக வழக்கில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்க்கு நீதிமன்றம் நிபந்தனையற்ற ஜாமீன் வழகியுள்ளது.
நெல்லையில் உள்ள புலித்தேவர் நினைவிடத்தில் 2017 ஆம் ஆண்டு புலித்தேவர் பேரவை தலைவர் காரை சேதப்படுத்தியதாக திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது வழக்குபதிவு செய்தது.இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கருணாஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அப்போது விசாரணையில் கருணாஸ் தரப்பு வழக்கறிஞ்ர்கள் 2017ஆம் ஆண்டே வாழைக்கு பதிவு செய்த காவல்துறை இந்த சம்பவத்துக்கும் , நடிகர் கருணாஸ்க்கும் எவ்வித சாம்மந்தமும் இல்லை என்று எழுதி வாங்கியதை சுட்டிக்காட்டினர்.அதை தொடர்ந்து குற்றப்பத்திரிக்கையும் முறையான ஆவணக்கள் இல்லை என்பதை கரணம் காட்டி நீதிபதிகள் காவல்துறையை எச்சரித்தனர்.அது மட்டுமில்லாமல் நீதிபதிகள் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்துக்கு ஏன் இப்போது கைது செய்ய நினைக்குறீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்ப காவல்துறை முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்ததால் நீதிபதிகள் காவல்துறையை எச்சரித்து நடிகர் கருணாஸ்க்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கினார்..
DINASUVADU