தொழில்நுட்பம் தீவிரவாதிகளுக்கும் உதவுகிறது : பாரக் ஒபாமா

Default Image

டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவர்கள் பேசியது என்னவென்றால்:

தொழில்நுட்பமானது, வளர்ச்சியடைந்து வரும் உலகில் இடைவெளிகளை நிரப்பும் பாலமாக இருக்கிறது. அதேநேரத்தில், தொழில்நுட்பத்தின் திடீர் வளர்ச்சியில் பல்வேறு இணையதளங்கள் மக்களுக்கு தீய செய்திகளைப் தருகின்றன. நவீன தகவல் சாதனங்கள் தீவிரவாதிகளுக்கும் உதவுகின்றன. தீயவர்களும் சமூக விரோத சக்திகளும் நவீன தகவல் சாதன வசதிகளை பயன்படுத்திக் கொள்கின்றன. மக்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்ற இதைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிடில் தகவல் தொழில்நுட்பமானது, மக்களை பிரிவினையிலும் தனிமைப்படுத்துவதிலும் கொண்டு சென்றுவிடும்.

2015-ம் ஆண்டு இந்தியாவுக்கு நான் வந்தபோது மத சகிப்புத்தன்மை, அனைவருக்கும் தங்கள் மத நம்பிக்கைகளை பின்பற்றும் உரிமை, மத அடிப்படையில் பிளவு இருக்கக் கூடாது என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து தங்களை இந்தியர்களாக கருதுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக மற்ற நாடுகளில் இதுபோன்று நடப்பதில்லை. இந்தியா தனது முஸ்லிம் மக்களை போற்றி பேணி வளர்க்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டும்.’ இவ்வாறு ஒபாமா பேசினார்.

பாகிஸ்தானின் பயங்கரவாதம் குறித்த கேள்விக்கு அவர், ‘‘ஒசாமா பின்லேடன் தங்கள் நாட்டில் இருந்தார் என்பது பாகிஸ்தானுக்கு தெரிந்திருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால், அதை நாங்கள் தீவிரமாக கண்காணித்தோம்’’ என்றார்.

மேலும், ஒபாமா பேசுகையில், ‘‘பிரதமர் மோடியை விரும்புகிறேன். இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையை அவர் வைத்துள்ளார். அதிகாரமட்டத்தை அவர் நவீனமாக்கி வருகிறார். பாரிஸில் நடந்த பருவநிலை தொடர்பான மாநாட்டில் ஒப்பந்தம் ஏற்பட முக்கிய பங்காற்றினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் என் நண்பர்தான். இந்தியாவின் நவீன பொருளாதாரத்துக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். மேலும், மோடியும் மன்மோகனும் சிறந்த தலைவர்கள்’’ என்று பாரக் ஒபாமா கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்