தொங்கியபடி உயிருக்குப் போராடிய குழந்தை! காப்பாற்றிய இளைஞர்..!
பிரான்ஸ் நாட்டில் 4 மாடியில் தொங்கியபடி உயிருக்குப் போராடிய குழந்தையை இளைஞர் ஒருவர், கட்டடத்தின் வெளிப்புறமாக ஏறிச்சென்று காப்பாற்றினார்.
பாரீசில் உள்ள குடியிருப்பு ஒன்றில் குழந்தையை வீட்டுக்குள் வைத்து விட்டு பெற்றோர் வெளியே சென்றுவிட, குறும்புக்கார குழந்தையோ ஜன்னல் வழியாக பால்கனிக்கு வந்தது. பின்னர் பிடிமானம் ஏதுமில்லாமல் 4வது மாடியின் ஸ்லாப்பில் தொங்கிக் கொண்டிருந்தது.
இதனைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் வீட்டின் உள்பகுதி வழியாக குழந்தையைக் காப்பாற்ற முயன்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாகச் சென்ற முகம்மது கஸாமா என்ற இளைஞர் சற்றும் யோசிக்காமல் ஸ்லாப்களை மட்டும் பிடித்து ஏறி குழந்தையை லாவகமாக காப்பாற்றினார்.