தேர்தல் பரிதாபம்:318 வாக்குச்சாவடியில் தாக்குதல்..ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..!!
ஆப்கானிஸ்தான் தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களும் நடத்தப்பட்டன.
ஆப்கானிஸ்தான் தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இதில் 170 பேர் பலியாயினர்.250 உறுப்பினர்களைக் கொண்ட ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. 2500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆனால் தேர்தல் நடந்த பெரும்பாலான தொகுதிகளில் பயங்கர வன்முறை வெடித்தது.
வாக்காளர்கள் பெருமளவில் உற்சாகத்துடன் திரண்டு வந்து வாக்குச் சாவடிகளில் காத்திருந்தனர். இதனால் பயங்கரவாதிகள் ஆத்திரம் அடைந்து வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் ஆங்காங்கே வெடிகுண்டு மற்றும் ராக்கெட் தாக்குதல்களையும் நடத்தினர்.குறிப்பாக காபூல், காந்தகார், நங்கார்ஹர், குண்டூஸ், ஹெல்மாண்ட் மாகாணங்களில் தலீபான் பயங்கரவாதிகள் ஓட்டுச் சாவடிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தினர். தலைநகர் காபூலில் மனித வெடிகுண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது.
318 ஓட்டுப்பதிவு மையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக தலீபான் பயங்கரவாதிகள் அறிவித்தனர். இதில் மொத்தம் 170-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பலியாகி விட்டனர். மேலும் 300-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் 350-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் நேற்று திட்டமிட்டபடி ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. இந்த பகுதிகளில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
DINASUVADU