தெலுங்கானா, ராஜஸ்தானில் நாளை சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு…!!
தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் வசுந்தரரஜே தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் நாளை காலை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி இரு மாநிலங்களிலும் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
முன்னதாக இந்த இரு மாநிலங்களிலும் நடைபெற்ற இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், வசுந்தரா ராஜே சிந்தியா, ராமன் சிங் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதே போன்று, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், சச்சின் பைலட் போன்றோர் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு நடைபெற உள்ள இரு மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
dinasuvadu.com