தென் ஆப்பிரிக்காவின் கருப்பின தலைவர் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மாடிகேசலா காலமானார்…!
தென் ஆப்ரிக்காவில் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மாடிகேசலா காலமானார்.இதனை அவருடைய குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
இனவெறிக்கு எதிராகப் போராடிய தென் ஆப்பிரிக்காவின் கருப்பின தலைவர் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மாடிகேசலா காலமானார். இதனை அவருடைய குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் வின்னி ஜோகனஸ்பர்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர் ஏப்ரல் 2ம் தேதி காலமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டு தமது வாழ்வையே நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக வின்னி பல முறை சிறை சென்றதாகவும் சிறையில் அடைக்கப்பட்ட தமது கணவர் நெல்சன் மண்டேலாவின் நினைவை போற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வின்னியின் மறைவுக்கு தென் ஆப்பிரிக்க அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.