துப்பாக்கிசூடுதல் சம்மேளத்தின் உயரிய விருதை….பெற்ற முதல் இந்திய வீரர் அமினவ் பிந்த்ரா சாதனை…!!!

Default Image

ப்ளூ க்ராஸ் சார்பில் ஆண்டுதோறும் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சர்வதேச அளவில் சிறந்த பங்களிப்பைத் தருகின்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு கவுரவப் பட்டத்தினை வழங்கி வருகிறது.
இந்நிலையில் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்றார்  இந்திய வீரர் அமினவ் பிந்த்ரா (36).இதனால் அவருக்கு சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் சம்மேளனத்தின் (ஐ.எஸ்.எஸ்.எஃப்)சார்பில் வழங்கப்படும் ப்ளூ க்ராஸ் என்ற உயரிய விருதனான கவுரவப் பட்டம் வழங்கி இந்திய வீரர் அமினவ் பிந்த்ராவை கவரப்படுத்தியுள்ளது.இந்த பட்டம் ஜெர்மனி நாட்டின் முனிச் என்கிற நகரில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு வழங்கப்பட்டது. இது குறித்த தகவல்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஐ.எஸ்.எஸ்.எஃப்-ன் பட்டத்தை நான் பணிவுடன் பெற்றுக்கொள்கிறேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.
Image result for abhinav bindra
இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா இதுவரை கலந்து கொண்ட போட்டிகள் என்று பார்த்தால் 2008 ஒலிம்பிக்கில் போட்டியில் தங்கம், 2006 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கமும்  மற்றும் காமென்வெல்த் போட்டிகளில் சுமார் 7 பதக்கங்களையும், மேலும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தலா 3 பதக்கமும் வென்றுள்ளார். கடந்த 2008 பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று அசத்தி சாதனை படைத்தார்.மேலும் இளம் வீரர்களுக்கு வழிவிடும் நோக்கத்தில் அபினவ் பிந்த்ரா  33-வது வயதில் தனது ஓய்வை அறிவித்தார்.தூப்பாக்கி சூடுதலில் இவரின் சாதனைகளைப் பாராட்டி இந்திய அரசு அர்ஜூனா விருது, கேல் ரத்னா விருது மற்றும் பத்ம பூஷன் விருதுகளை வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.மேலும் துப்பாக்கி சம்மேளத்தால் கவுரவிக்கப்படும் முதல் இந்திய வீரர் இவர் ஆவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்