துக்கத்தின் நடுவிலும் தூத்துக்குடியில் தலை தூக்கும் மனிதநேயம்..!!
தூத்துக்குடியில் கடும் கலவரங்களுக்கு மத்தியில் காலை முதல் உணவின்றி தவித்த போலீசார் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நோம்பு கஞ்சி உணவாக வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி சேகரிப்புக்காக வெளி மாநிலங்களில் இருந்தும் பத்திரிக்கையாளர்கள் குவிந்துள்ளனர். வன்முறை சம்பவங்களால் அப்பகுதியில் உள்ள சிறிய பெட்டிக்களைகள் முதல் பல்பொருள் அங்காடிகள் வரை மூடப்பட்டுள்ளன. இதனால் போலீசார் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உணவின்றி பணியில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் அண்ணா நகர் 6-வது தெருவில் உள்ள முஹையத்தீன் ஆண்டவர் பள்ளிவாசலில் போலீசார் மற்றும் பத்திரிக்கையார்களின் பசியை போக்குவதற்காக பள்ளிவாசல் சார்பில் நோம்பு கஞ்சி வழங்கப்பட்டது. வழக்கமாக 6.30 மணிக்கு மேல் வழங்கப்படும் நோம்பு கஞ்சி கலவரங்களுக்கு மத்தியில் போலீசார் மற்றும் பத்திரிக்கையாளர்களின் நலன் கருதி முன்தாகவே வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்