தீவிரவாதிகளால் நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 -பள்ளி மாணவிகள் விடுதலை!
தீவிரவாதிகளால் நைஜீரியாவில் போகோஹரம் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 110 மாணவிகளில் 100 பேரை விடுத்திருப்பதாக நைஜீரியா அரசு தகவல் தெரிவித்துள்ளது. மற்றவர்களின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. ஆனால் 5 மாணவியர் இறந்திருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
110 மாணவிகள் கடந்த மாதம் நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையை ராணுவம் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சுமார் 100 பள்ளி மாணவிகள் அவர்களிடமிருந்து டப்ஷி பகுதிக்கு மீண்டு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவலை மாணவிகளின் பெற்றோர் உறுதி செய்தனர்.
கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோருக்கு ஆதரவாக செயல்படும் பெற்றோர்கள் குழுவின் தலைவர் பசீர் மான்ஸோ செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, கடந்த மாதம் போகோ ஹரம் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட மாணவிகள் புதன் காலை 8 மணியளவில் சுமார் 9 வாகனங்களில் டப்ஷி பகுதியில் இருக்கும் பள்ளியின் வாசலின் அருகே வந்து இறங்கினர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.