திருடிய இடத்தில் திருடன் செய்த செயல்… சர்ப்ரைஸ் கொடுத்த போலீஸ்
திருட சென்ற இடத்தில் இரவு முழுவதும் தூங்கிவிட்டு பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் ஸ்காட்லாண்டில் நடந்துள்ளது.
ஸ்காட்லாண்ட் தலைநகர் எடின்பர்க்கில் ஒரு வீட்டில் திருடன் ஒருவன் கொள்ளையடிக்க சென்றுள்ளான். கொள்ளையடித்த பொருட்களை எடுத்துச் செல்லாமல் வீட்டில் இருந்த உணவை சாப்பிட்டு அசதியில் தூங்கியுள்ளான்.
இவன் கொள்ளையடிப்பதை நடுஇரவிலேயே தெரிந்த காவல்துறை அவனை காலையில் தான் கைது செய்துள்ளனர். திருடனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவே அவர்கள் காலையில் கைது செய்திருக்கிறார்களாம்.
இந்த சம்பவத்தை பற்றி ஸ்காட்லாண்ட் போலிசார் தங்களது சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர் .