திமுக வைத்த செக் : "விழிபிதுங்கும் எடப்பாடி" சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு..!!
தமிழக முதல் அமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக முதல்-அமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் மூலம் ரூ.4,833 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும், இதை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்த புகார்களை முற்றிலுமாக மறுத்துள்ள அ.தி.மு.க. தலைமை சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தது. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.அதில் ,முதல்-அமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டால் அந்த விசாரணையில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொண்டு விசாரிக்க வேண்டும், தங்கள் வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று அந்த கேவியட் மனுவில் கூறப்பட்டு உள்ளது.
DINASUVADU