திமுக – பிஜேபி கூட்டணி : “மக்கள் போட்ட பிச்சை” அமைச்சர் பரபரப்பு பேட்டி..!
நேற்று தூத்துக்குடியில் பேசிய செய்தித்தொடர்பு அமைச்சர் கடம்பூர் ராஜீ கருணாநிதி சமாதி அமைக்க அதிமுக அரசு கோர்ட்டில் மேல்முறையீடு செய்யாமல் அனுமதியளித்துள்ளது என்றால் அது அரசு போட்ட பிட்சை என விமர்சனம் செய்தார்.இது திமுகவினரை கோவத்துக்குள்ளாக்கியது.
அமைச்சர் கடம்பூர் ராஜீயின் இந்த பேச்சுக்கு திமுகவினர் பதிலடி பதில் கொடுத்தாலும் இந்தியாவின் மத்திய அமைச்சர் பதிலளித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.திமுக பிஜேபி கூட்டணியை என்று கேள்வி சரிதானோ என்று நினைக்க வைக்கிறது.
இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய இணையமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கடம்பூர் ராஜீ பேசியது குறித்து கேட்டதுக்கு பதவியில் இருப்பவர்கள் இப்படி பேசக்கூடாது அது மக்கள் போட்ட பிட்சை என்றார்.இவரின் இந்த பேட்டி திமுக பிஜேபியின் மறைமுக கூட்டணி உறுதிதான் என்று அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.