தின் கியாவ் மியான்மர் அதிபர் பதவியில் இருந்து விலகல்!

Default Image

ஜனநாயக முறைப்படி மியான்மரில் முதன்முறையாக  தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் தின் கியாவ் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

மியான்மரில் ஜனநாயக முறைப்படி 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூ கியின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி வெற்றிபெற்றது. வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற ஆங்சான் சூ கி அதிபர் பதவியேற்கத் தடை இருந்ததால் அவர் கட்சியைச் சேர்ந்தவரும் இளமைக்காலத்தில் இருந்தே அவர் நண்பராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் திகழும் தின் கியாவ் அதிபராகப் பொறுப்பேற்றார்.

இரண்டே ஆண்டுகளில் அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் துன்புற்று வரும் நிலையில் ஓய்வெடுப்பதற்காகப் பதவியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்