தினம் ஒரு திருவெம்பாவை

- எங்கும் சிவம் எதிலும் என்பார்கள் நமச்சிவாயா என்ற பஞ்சர மந்திரத்திற்குள் அடங்கியவர் அந்த பஞ்சபூதங்களாய் நிற்கும் பேரொளி
- தினம் ஒரு திருவெம்பாவையில் இன்றைய தொடர்ச்சி பாடலையும் அதன் பொருளையும் பற்றி அறிந்துகொள்வோம்.
திருவெம்பாவை
பாடல் : 13
பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கண் மலம்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாயக் தாடேலோர் எம்பாவாய்!
– மாணிக்கவாசகர்-
பாடல் விளக்கம் :
கரிய குவளை மலர்கள் குளத்தின் நடுவில் உள்ளது.அதன் அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்களாக முளைத்து உள்ளன.நீர் காக்கைகள் எல்லாம் நீரில் மிதக்கினறது.அத்தகைய இந்த குளத்தில் மக்கள் தங்கள் அழுக்கை கழுவ வருகிறார்கள் அதனோடு நமச்சிவாய என்று சப்தமிடுகிறார்கள் இதனால் இந்த குளம் சிவன் மற்றும் பார்வதியை போன்று காட்சி அளிக்கிறது. தாமரை மலர்கள் நிறைந்துள்ள இந்த குளத்தில் சங்கு வளையல்கள் சலசலக்க,கால் வளையல்கள் கலகலவென ஒலியெழுப்புகிறது மார்பு விம்ம குளத்தின் நடுபகுதிக்கு சென்று நீராடுவோம் என்று பாடுகிறார்.
மாணிக்கவாசகரின் தெய்வீக பார்வையில் சிவன் -பார்வதி:
கரிய நிறம் கொண்டவள் அம்பிகை அதனால் தான் அம்பாளை சியாமளா என்று அழைக்கிறோம் சியாமளம் என்றால் கருநீலம் என்று பொருள் சிவந்தநிறமுடையவர் சிவன் அம்பிகையை கரிய குவளை மலராகவும் தாமரையை சிவனாகவும் பாவித்து தன் பாடலில் பாடியுள்ளார்.குளம் உள்ளது அது சாதராணக் குளமாக இருந்தால் உடல் அழுக்கு நீங்கும்,அதுவே பக்தி குளமாக இருந்தால் மன அழுக்கு நீங்கும் என்ற அருமையான கருத்தை எடுத்துரைக்கிறார் மாணிக்கவாசகர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!
February 23, 2025
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025
மீண்டும் மீண்டுமா? அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
February 22, 2025